வெளியாகியுள்ள போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சை திணைக்களம்
இலங்கை கல்வி நிர்வாக சேவை (Sri Lanka Education Administrative Service) ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளே இன்று (19.4.2024) வெளியாகி உள்ளன.
கல்வி நிர்வாக சேவை
இந்நிலையில், பரீட்சையில் சித்தியடைந்த 735 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்கள (Department of Examinations - Sri Lanka) இணையதளத்தில் சேர்க்கப்பட்டது.
பரீட்சாத்திகள் முடிவுகளை https://www.doenets.lk என்ற இணையதளத்தின் மூலம் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் தகுதியான 440 பேர் நேர்முகத்தேர்வு நடத்தி கல்வி நிர்வாக சேவையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
