யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பெண்ணொருவரின் மரணம் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டு
யாழ். போதனா வைத்தியசாலையில் (JaffnaTeaching Hospital) இதய சத்திர சிகிச்சையின் போது பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் தவறே காரணம் என உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (18.4.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பெண்ணின் சகோதரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
கிளிநொச்சி (Klinochchi) பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் பாக்கியசெல்வி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுரேஷ்குமார் பாக்கிய செல்வி எனும் எனது சகோதரிக்கு கடந்த 08ஆம் திகதி போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
