மன்னார் கடலில் எண்ணெய் ஆய்வுக்கு வழிவகுக்கும் 2027 வரவு செலவுத் திட்டம்
இலங்கையின் கடல்சார் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை (PDASL), மன்னார் கடற்படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்திக்காக நான்கு கடல் வலயங்களுக்கு சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கேள்விப்பத்திரங்களைக் கோரியுள்ளது.
இந்த நான்கு வலயங்களும் மொத்தம் சுமார் 33,964 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளன.
கேள்விப்பத்திரங்கள் திறக்கப்படும்
இதற்கான கேள்விப்பத்திரங்கள் 2027 பெப்ரவரி 2ஆம் திகதி திறக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2027 வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.

மன்னார் கடற்படுகையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இயற்கை எரிவாயு மற்றும் திரவ ஹைட்ரோகார்பன் வளங்கள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு தாம் ஆரம்பித்த எண்ணெய் ஆய்வுப் பணிகளை தற்போதைய அரசாங்கம் மீண்டும் முன்னெடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக, முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து வெளியேற வாக்கெடுப்பு நடத்திய கிராமம்: ஏமாற்றத்தை அளித்துள்ள தகவல் News Lankasri