தமிழர் பகுதிகள் எங்கும் மாவீரர் வார அனுஷ்டிப்புகள் ஆரம்பம்!

Sri Lankan Tamils Jaffna M A Sumanthiran Sri Lankan Peoples Maaveerar Naal
By Rakesh Nov 22, 2026 09:51 PM GMT
Report

மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, மாவீரர் வாரம் 21ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நிலையில், வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகள் நேற்று(22.11.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் 

வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்கு முன்பாக அமைந்துள்ள இந்த நினைவு வளாகத்தை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் சுடரேற்றித் திறந்து வைத்துள்ளார்.

தமிழர் பகுதிகள் எங்கும் மாவீரர் வார அனுஷ்டிப்புகள் ஆரம்பம்! | Observance Of Maaveerar Week Begins

இந்த நிகழ்வில், வலிகாமம் தெற்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஷ், பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தியுள்ளனர்.

மாவீரர் நாளை முன்னிட்டு வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை (கே.கே.எஸ்.) பிரதான வீதியில் மாவீரர் நாள் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகள் எங்கும் மாவீரர் வார அனுஷ்டிப்புகள் ஆரம்பம்! | Observance Of Maaveerar Week Begins

மாவீரர் வாரத்தில் புதிய சர்ச்சை - கொடியை அகற்றுமாறு பொலிஸார் அழுத்தம்

மாவீரர் வாரத்தில் புதிய சர்ச்சை - கொடியை அகற்றுமாறு பொலிஸார் அழுத்தம்

பருத்தித்துறை 

தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் 2ஆம் நாள் அனுஷ்டிப்பு, நேற்று(22) மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை பிரதேச சபை முன்பாக இடம்பெற்றுள்ளது.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில், மாவீரர் ஒருவரின் தந்தை ஈகை சுடரை ஏற்றி வைத்து மலர் மாலை அணிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு மலர் அஞ்சில் செலுத்தியுள்ளனர்.

இதில் பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர் காந்தன், முன்னாள் உப தவிசாளர் தினேஷ், மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்கள் மாவீரர் உறவுகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

மேலதிக தகவல் - எரிமலை

கோப்பாய்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் நேற்று(22.11.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் பார்வைக்காக நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகள் எங்கும் மாவீரர் வார அனுஷ்டிப்புகள் ஆரம்பம்! | Observance Of Maaveerar Week Begins

இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இந்த நினைவாலயம் தொடர்ந்து பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்து தமது தேசிய மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் செய்யுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலதிக தகவல்  - தீபன்

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு - செம்மலை கிராமத்தை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(22.11.2026) செம்மலை ஏற்பாட்டு குழுவின் ஒழுங்குபடுத்தலில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மாவீரர்களின் பெற்றோர்கள் பாண்ட் வாத்திய முழங்க , மங்கள வாத்தியம் இசைக்க பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டதனை தொடர்ந்து, பொதுப்படத்திற்கான மலர்மாலையை மாவீரர் ஊரவனின் தந்தை க.சத்தியானந்தனும், மூன்று மாவீரர்களின் சகோதரன் மு.நகுலேஸ்வரனும் அணிவித்து வைக்க பொதுச்சுடரினை மாவீரன் எழில் வேந்தனின் தாயார் சௌபாக்கியம், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் பவுள்ராஜ் இணைந்து ஏற்றி வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களின் படங்களுகு்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகள் எங்கும் மாவீரர் வார அனுஷ்டிப்புகள் ஆரம்பம்! | Observance Of Maaveerar Week Begins

நிகழ்வில் கலை நிகழ்வுகளும், மாவீரர்களின் வீரம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றன.

இதன்போது கலந்துகொண்ட மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள் மதிப்பளிக்கப்பட்டு நினைவாக பழ மரக்கன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கிராம மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள், பொதுமக்கள், விளையாட்டுக் கழக வீரர்கள், இளைஞர்கள், யுவதிகள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழர் பகுதிகள் எங்கும் மாவீரர் வார அனுஷ்டிப்புகள் ஆரம்பம்! | Observance Of Maaveerar Week Begins

மேலதிக தகவல் - ஷான்


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US