பொருட்களின் விலையேற்றத்தால் வெடிக்குமா மக்கள் போராட்டம்..! அரசு மீது முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என அரசாங்கம் அஞ்சுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடுவார்கள் என்ற அச்சத்தினால் அடக்கு முறையான சட்டங்களை அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் போராட்டங்களை கட்டுப்படுத்த திட்டம்
நாடாளுமன்றில் 159 ஆசனங்களை கொண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு வெளியே அதிகாரம் இன்றி திண்டாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்ப்பு குரல்களை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சி செய்கின்றதா என்ற கேள்வி எழுவதாக அவர் தெரிவித்துள்ளார். பொருட்களின் விலை அதிகரிப்பு வறுமை அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் போன்ற ஏதுக்களின் காரணமாக எதிர்காலத்தில் மக்கள் அரசாங்கத்தை எதிர்பார்ப்பார்கள் என்ற அச்சம் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே மக்களின் எதிர்ப்பு போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய அடக்குமுறை சட்டங்களை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் மக்கள் முன்னெடுக்கக்கூடிய எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்பொழுது இருந்து அரசாங்கம் ஆயத்தமாகின்றதா என்ற கேள்வி எழுவதாகவும் அதன் காரணமாகவே புதிய அடக்குமுறை சட்டங்களை உருவாக்கும் முனைப்பு மேற்கொள்ளப்படுகின்றதா என முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam