சக வேட்பாளர்களை அச்சுறுத்திய தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) சர்வகட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற வேட்பாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் கேள்வி கேட்ட சக வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) முதன்மை வேட்பாளர் செயற்பட்டுள்ளார்.
"எமது எம்.பி. எமது குரல்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சர்வகட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற போதே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மக்களுக்கு அரசியல் தெளிவு
குறித்த இந்நிகழ்வின் போது பொதுமகன் ஒருவர், "தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களிடம் முன்வைக்கும் அரசியல் கொள்கை ஒற்றையாட்சியா? சமஷ்டியா? சுயநிர்ணய உரிமையா? இலங்கையில் மூன்று தசாப்தமாக இடம்பெற்ற யுத்தம் இனப்படுகொலையா? போர்க் குற்றமா? போன்ற கேள்விகளைத் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் இளங்குமரனிடம் முன்வைத்தார்.
குறித்த கேள்விகளுக்குப் பதில் வழங்கிய இளங்குமரன், "பலருக்கு ஒற்றையாட்சி என்றால் என்ன, சமஷ்டி என்றால் என்ன எனத் தெரியாது. அதை முதலில் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.
மக்களுக்கு ஒரு அரசியல் தெளிவை ஏற்படுத்திய பின் மக்களுக்கு எந்தத் தீர்வு வேண்டும் என்பதை மக்களிடமே விடுகின்றோம்." என்றார்.
இதன்போது சக வேட்பாளர்களான மணிவண்ணன், உமாசந்திரா பிரகாஷ் குறித்த கேள்விகளுக்கு உரிய பதில் வழங்குமாறு கோரியபோது, சக வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் ஒருமையிலும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் இளங்குமரன் பேசியுள்ளார் .
இதனை அந்தக் கூட்டத்திலிருந்த சக வேட்பாளர்கள் கடுமையாக எதிர்த்ததுடன், "ஜே.வி.பி. வேட்பாளர்களை அச்சுறுத்துகின்றது. எங்களை அடக்கி ஆள நினைக்கின்றது" என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
