அநுர மீது நம்பிக்கையிழந்த அமெரிக்கா! விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை
மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை நாட்டு மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பாரதூரமான விடயம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அறுகம் குடாவில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த ஒரு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானது.
புலனாய்வுப் பிரிவின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் அமெரிக்க தூதரகம் தமது பிரிவுகளுக்கு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் கொழும்பில் உள்ள தூதரகங்கள் சந்தேகம் கொண்டால் நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபல்யமடைய வேண்டும் என்பதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் பாதுகாப்பு அலட்சிப்படுத்தப்பட்டுள்ளமை ஆரோக்கியமானதல்ல. நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதை பயங்கரவாதி சஹ்ரான் உட்பட்ட தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.
விளைவு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலாக வெளிப்பட்டது. ஆகவே குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேசிய பாதுகாப்பை பலவவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 31 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
