புத்தளம் மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் போட்டியின்றி மேயராக தெரிவு
புத்தளம் மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் மேயர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட எம்.எப். ரின்சாத், போட்டியின்றி மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்னிறுத்தப்பட்ட எம்.என்.எம். நுஸ்கியின் பெயர் நிராகரிக்கப்பட்டதை அடுத்து ரின்சாத், போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
போட்டியின்றி மேயராக தெரிவு
பிரதி மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.என்.எம்.நுஸ்கி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் புத்தளம் மாநகர சபைக்கான கன்னி அமர்வு, மாநகர சபையின் பொது நூலகத்தில் அமையப்பெற்றுள்ள மாநகர சபையின் சபா மண்டபத்தில், இன்று திங்கட்கிழமை (16) மாலை 03 மணியளவில் இடம்பெற்றது.
சபைக்கு தெரிவாகியுள்ள, தேசிய மக்கள் சக்தியின் 07 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 04 உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 03 உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் 03 உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியின் 01 உறுப்பினர் மற்றும் பந்து சின்னம் சுயேட்சை குழுவின் 01 உறுப்பினர் என மொத்தமாக 19 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தனர்.





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
