சாரதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யும் தீர்மானம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக செய்தி ஒன்று வெளியானது.
இந்த செய்தி குறித்து மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய சாரதி அனுமதிப் பத்திரங்கள்
அந்த அறிக்கையில், சாரதி அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வது குறித்து இதுவரையில் எந்தவித தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
இதேவேளை, 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு பதிலாக, புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிப்பது தொடர்பில் அறவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விபரங்கள்
நாட்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையிடமிருந்து ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றுள்ளனர்.
மேலும் இவர்களில் நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் 2009இற்கு முன்னர் பெறப்பட்ட ஓட்டுநர் உரிமங்களைக் கொண்டுள்ளனர்.
இவற்றில், இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவை கனரக வாகன ஓட்டுநர் உரிமங்கள். அவற்றைப் புதுப்பிப்பது கட்டாயமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
