சுதந்திர தின கரிநாள் போராட்டம்! கிளிநொச்சியில் குவிந்த பெருந்திரளான மக்கள் -- LIVE

Batticaloa Kilinochchi Sri Lankan protests
By Sudaron Feb 04, 2026 01:10 PM GMT
Report

புதிய இணைப்பு

சுதந்திர நாளாகிய இன்று (04-02-2026) கரி நாளாக அறிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கிளிநொச்சி கந்தசாமி ஆலயமுன்றலில் இருந்து கிளிநொச்சி பசுமை பூங்காவளாகம் வரை a9 வீதி வழியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பொத்துவில தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்ட அமைப்பு ஆகிய இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராஜா ரவிகரன், சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், வேலன் சுவாமிகள், கிளிநொச்சி பங்குத்தந்தை உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கானாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள், கட்சி ஆதரவாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் இணைப்பு 

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவினர்கள் உள்ளிட்டவர்கள் மேற்கொண்டு வரும்  ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி நகரை அண்மித்துள்ளது. 

மேலும், ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்று வரும் போது ஏ9 வீதியில் சுதந்திர தினத்தினைக் கொண்டாடிய ஒரு சாராருக்கும், போராட்டம் நடத்துபவர்களுக்கும் இடையே கடும் குழப்ப நிலை தோன்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தகவல் - தேவந்தன்


இரண்டாம் இணைப்பு

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி கிளிநொச்சி - கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் - யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

சுதந்திர தின கரிநாள் போராட்டம்! கிளிநொச்சியில் குவிந்த பெருந்திரளான மக்கள் -- LIVE | Independence Day Protest In Kilinochchi

சுதந்திர தின கரிநாள் போராட்டம்! கிளிநொச்சியில் குவிந்த பெருந்திரளான மக்கள் -- LIVE | Independence Day Protest In Kilinochchi

சுதந்திர தின கரிநாள் போராட்டம்! கிளிநொச்சியில் குவிந்த பெருந்திரளான மக்கள் -- LIVE | Independence Day Protest In Kilinochchi

சுதந்திர தின கரிநாள் போராட்டம்! கிளிநொச்சியில் குவிந்த பெருந்திரளான மக்கள் -- LIVE | Independence Day Protest In Kilinochchi

முதலாம் இணைப்பு

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் இனவாதத்திற்கு இடமில்லை! சுதந்திர தினத்தில் அநுர சூளுரை - LIVE

இலங்கையில் இனவாதத்திற்கு இடமில்லை! சுதந்திர தினத்தில் அநுர சூளுரை - LIVE

கிளிநொச்சியில் பூரண கதவடைப்பு

இந்நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.


தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள - பௌத்த மயமாக்கப்படுதல், இந்தப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு என்பவற்றை வலியுறுத்தியே வடக்கு - கிழக்கில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், பொது அமைப்புகள், வணிகர் சங்கங்கள், கடற்றொழிலாளர் அமைப்புகள், சமூக நிறுவனங்கள் எனப் பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலதிக தகவல் - ராகேஸ்,தேவந்தன்,கஜிந்தன்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

சுதந்திர தின கரிநாள் போராட்டம்! கிளிநொச்சியில் குவிந்த பெருந்திரளான மக்கள் -- LIVE | Independence Day Protest In Kilinochchi  

தயார் நிலையில் அரசாங்கம் - ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

தயார் நிலையில் அரசாங்கம் - ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

தென்னிலங்கையில் தமிழ் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை

தென்னிலங்கையில் தமிழ் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US