லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதோச நிறுவன கிளைகளிலும் 6 அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
.இந்த விலை குறைப்பு நேற்று முதல் (செப்டம்பர் 26) நடைமுறைக்கு வந்துள்ளது.
பொருட்களின் விலை விபரம்
அதன்படி, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 309 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு கிலோகிராம் வெள்ளை சர்க்கரையின் விலை ரூ. 4 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 245 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை ரூ. 2 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 242 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 5 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 174 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சதோச தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி விலை ரூ. 5 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 173 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோச விற்பனை நிலையங்களிலும், குறைக்கப்பட்ட விலைகளில் பொருட்களை வாங்கலாம் என்று லங்கா சதோச நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.