இது ஆரம்பம் மட்டும்தான்! அரசாங்கத்திற்கு சஜித் விடுத்த எச்சரிக்கை

Colombo SL Protest
By Rakesh Nov 03, 2022 08:32 AM GMT
Report

அரசாங்கம் அடக்குமுறையைக் கைவிடாவிட்டால், மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி தக்க பாடம் புகட்டப்படும், அதற்கான ஆரம்பம் மட்டுமே இது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் இல்லாதொழிக்க வேண்டும் என கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சிவில் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

அடக்குமுறையை உடன் நிறுத்த வேண்டும் என்றும், பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் நீக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, 43 ஆம் படையணி, சுதந்திர மக்கள் சபை உட்பட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்கம் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

இது ஆரம்பம் மட்டும்தான்! அரசாங்கத்திற்கு சஜித் விடுத்த எச்சரிக்கை | November 2 Colombo Protest Sajith Premadhasa

அனுமதி மறுப்பு

இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு பொலிஸார் மறுத்திருந்தனர். இதற்கான காரணமும் ஏற்பாட்டுக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் காலை முதலே கொழும்பை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போராட்டம் இடம்பெறும் எனக் கருதப்பட்ட இடங்களில் பொலிஸார், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இருத்தபோதும், ஆர்ப்பாட்ட பேரணியைக் கைவிடுவதற்கு ஏற்பாட்டாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் மருதானையில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமானது.

இது ஆரம்பம் மட்டும்தான்! அரசாங்கத்திற்கு சஜித் விடுத்த எச்சரிக்கை | November 2 Colombo Protest Sajith Premadhasa

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 43 ஆம் படையணியின் ஒருங்கிணைப்பாளர் சம்பிக்க ரணவக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் மருதானையில் இருந்து, கொழும்பு கோட்டை நோக்கி நகர்ந்த பேரணியில் இணைந்திருந்தனர்.

பொலிஸ் தடுப்பரண்

'டெக்னிகல்' சந்தி ஊடாக கோட்டை, புகையிரத நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்பது என்று திட்டமிடப்பட்டிருந்தபோதும், டெக்னிகல் சந்தி மற்றும் மிதக்கும் சந்தைக்கு இடைப்பட்ட பகுதியில் பொலிஸார் குவிந்திருந்தனர்.

போராட்டக்காரர்கள் முன்னேற முடியாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு, பதற்றம் உருவானது.

இது ஆரம்பம் மட்டும்தான்! அரசாங்கத்திற்கு சஜித் விடுத்த எச்சரிக்கை | November 2 Colombo Protest Sajith Premadhasa

தள்ளு முள்ளும் இடம்பெற்றது. பொலிஸாரின் பாதுகாப்பு கவசத்தை உடைத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டாலும் அதற்கு இடமளிக்கப்படவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா உள்ளிட்டவர்கள் பொலிஸாருடன் முரண்பட்டனர்.

கோரிக்கைக்கு உடன்படாத சஜித்

இதற்கிடையில் போராட்டக்காரர்கள் தடுக்கப்பட்ட இடத்திலேயே கூட்டம் நடத்தப்பட்டது. இதற்குப் போராட்டத்தில் பங்கேற்ற பலர் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பொலிஸாரின் பாதுகாப்பு தடையை உடைத்து முன்னோக்கி நகர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரிடம் வலியுறுத்தினர்.

இது ஆரம்பம் மட்டும்தான்! அரசாங்கத்திற்கு சஜித் விடுத்த எச்சரிக்கை | November 2 Colombo Protest Sajith Premadhasa

எனினும், அதற்கு அவர் உடன்படவில்லை. பின்னர் அங்கிருந்து வெளியேறினார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பினர்.

அரசியல் பிரமுகர்கள், தொழிற்சங்கவாதிகள் உள்ளிட்டோர் உரையாற்றிய பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

அத்துடன், "நாம் எவரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. திட்டமிட்டப்படி பேரணி நடத்தப்பட்டது. இது ஆரம்பம் மட்டும்தான், அரசு திருந்தாவிடின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US