சர்ச்சையை கிளப்பிய குரல் பதிவு - யாழ். மாணவி மீது புதிய குற்றச்சாட்டு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட விடயங்கள் தொடர்பிலான மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விவாகரத்துடன் தொடர்புடைய 14 பேரை எதிர் மனுதாரர்களாக கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ் நிலை காப்பு சட்டத்தின் கீழ், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையே இவ்வாறு 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவி மீது துணைவேந்தர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும், இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவருமான பெண்ணொருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் , முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் உடன் முன்னாள் மாணவி உரையாடிய தொலைபேசி பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20 இன் கீழ், யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 14 பேரை எதிர் மனுதாரர்களாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி , யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப் , டிக்டொக் , பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கில் நிபந்தனையுடனான கட்டளையை பிறப்பிப்பதா ? இல்லையா என்பதனை முடிவு செய்வதற்காக வழக்கு இன்றைய நாளுக்கு திகதியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, வழக்கு இன்று(10) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, எந்தவித கட்டளைகளும் வழங்கப்படாது, வழக்கினை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.