சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு
நிலவும் பாதகமான வானிலை காரணமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பு செயலிழந்துள்ளதால், வேரஹெர உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களின் நடவடிக்கைகள் இன்று (01) மேற்கொள்ளப்படாது என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கணினி அமைப்பினை சரிசெய்ய தொழில்நுட்பக் குழுக்கள் தற்போது கடுமையாக உழைத்து வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் சேவை
இருப்பினும், வேரஹெர தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய மாவட்ட அலுவலகங்கள் (குருநாகல், களுத்துறை, அம்பாந்தோட்டா, கம்பஹா, அனுராதபுரம், யாழ்ப்பாணம், மொனராகலை, கண்டி, காலி மற்றும் அம்பாறை) மூலம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுதல், விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகளை இன்று (01) வழங்க முடியாது என்று திணைக்களம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேற்படி ஆன்லைன் அல்லாத அலுவலகங்களின் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடரும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam