பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வடிகாலின் தற்போதைய நிலை..
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் திட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு மருதங்கேணியில் பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு பூர்த்தி செய்யப்படாமல் மண் கொண்டு மூடப்பட்டுள்ளது.
வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக கட்டப்பட்ட குறித்த வடிகால் அமைப்பு பூர்த்தி செய்யப்படாமல் பிரதேச செயலகத்தால் மண் கொண்டு மூடப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்பு அச்சம்
குறித்த கால்வாய் மூடப்பட்டுள்ளதால் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன் வீடுகளுக்குள்ளும் சென்று மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

சிறுவர்களும் குறித்த பகுதியில் ஆபத்தான முறையில் விளையாடுவதால் உயிரிழப்பு அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பல இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் முழுமை பெறாமல் இடையில் மண் கொண்டு மூடப்பட்டதால் வெள்ள நீர் வழிந்தோட இடம் இன்றி மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது ஒரு சில மாதங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலகம் பருத்தித்துறை பிரதேச சபையுடன் இணைந்து குறித்த வடிகாலை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri