எல்நினோவால் இலங்கை எதிர்கொள்ளப்போகும் தாக்கம்! அவசரமாக அரசாங்கம் தயாரிக்கும் திட்டம்
இலங்கையில் எல்நினோ வானிலையால் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தடுக்கும் நோக்கில் விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பை பேணுவதற்கும் உணவுப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கும் விவசாய அமைச்சு குறித்த திட்டத்தைத் தயாரித்துள்ளது.
இதற்காக ஒரு சாகுபடித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
சிறப்பு கவனம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நீர் மேலாண்மை மற்றும் நீர் வளங்களின் நீடித்த பயன்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீரைத் திறம்படப் பயன்படுத்துவது மற்றும் வீணாவதைத் தடுப்பது குறித்து விவசாயிகளுக்குக் கல்வி புகட்டுவதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்ச் சேதங்கள்
இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 37% ஆகக் குறைந்துள்ளது.
குறிப்பாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடுவீதியில் திடீரென பேருந்தை மறித்து சாரதியை வாளால் தாக்க முயற்சித்த பெண் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு