இலங்கையில் இருந்து சென்றவர் விமான நிலையத்தில் திடீரென விழுந்து மரணம்
இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென உயிரழந்துள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயது நபர் திடீரென மரணம் அடைந்தார்.
சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சையத் சிராஜுதீன் என்பவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றுவிட்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.
குடிவரவு சோதனை
விமானத்தில் இருந்து இறங்கியவர் குடிவரவு மற்றும் சுங்கத்துறை சோதனைகளை முடித்துவிட்டு, பிராட்வே செல்வதற்காக விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றார்.

அங்குள்ள டிக்கெட் கவுண்டர் அருகே சென்று கொண்டிருந்த போது, சையத் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதைக் கண்ட சக பயணிகளும் மெட்ரோ நிலைய ஊழியர்களும் உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் விரைந்து வந்து மயங்கிய நிலையில் இருந்த சையத்திற்கு முதலுதவி அளித்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி அங்கேயே உயிரிழந்தார்.
சம்பவத்தை தொடர்ந்து விமான நிலைய பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.