விமல் வீரவங்சவுக்கு CCIB அழைப்பாணை
அநுராதபுரத்தில் இடம்பெற்ற மொட்டுக் கட்சியின் மேடையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பின் படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை பொலிஸ் மத்திய குற்றத் தடுப்புப் பணியகத்தில் அவர் முன்னிலையாக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவங்ச விடுக்கப்பட்ட அழைப்பானை
கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் இடம்பெற்ற மொட்டுக் கட்சியின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு விமல் வீரவங்சவும் உரையாற்றியிருந்தார்.

இதன்போது, அவர் வெளியிட்ட கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் குறித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக பொலிஸ் மத்திய குற்றத் தடுப்புப் பணியகத்துக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை சமூகமளிக்குமாறு விமல் வீரவங்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அநுர அரசின் சர்வாதிகாரச் செயற்பாடுகள் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் முறையீடு - சாகர காரியவசம் அறிவிப்பு
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri