180 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் ஒலித்த அவசர சமிக்ஞை! நடுவானில் ஏற்பட்ட பரபரப்பு

Dubai Israel Flight
By Shadhu Shanker Sep 30, 2026 07:55 AM GMT
Report

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த Flydubai விமானம், இன்று (30) சவுதி அரேபியாவின் வான்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்தபோது அவசர சமிக்ஞையை வெளியிட்டு, திடீரென தனது பயணப் பாதையை மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இஸ்ரேலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விமான கடத்தல்

FZ1073 என்ற விமான இலக்கத்துடன் இயங்கிய குறித்த விமானம், துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் அருகிலுள்ள பென் குரியன் விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது.

இந்த நிலையில், விமானம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 7700 என்ற கடத்தல் அவசர குறியீட்டை வெளியிட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள், விமான கண்காணிப்புத் தரவுகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

180 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் ஒலித்த அவசர சமிக்ஞை! நடுவானில் ஏற்பட்ட பரபரப்பு | Dubai Tel Aviv Flight Reports Suspected Hijacking

7700 என்பது விமானத்தில் பொதுவான அவசரநிலை ஏற்பட்டுள்ளதை குறிக்கும் சர்வதேச அவசர குறியீடாகும். எனினும், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், விமானக் கடத்தல் முயற்சி எதுவும் இடம்பெறவில்லை என இஸ்ரேல் பின்னர் தெரிவித்துள்ளது.

பின்னர், குறித்த Flydubai விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

 கடுமையான மோதல்

விமானத்தின் விமானிகள் இருவருக்கும் இடையில் விமான அறைக்குள் ஏற்பட்டதாகக் கூறப்படும் கடுமையான மோதலின்போது அவசர சமிக்ஞை செயல்படுத்தப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், விமானத்தின் பயணப் பாதை மாற்றப்பட்டதற்கும் அவசர சமிக்ஞை வெளியிடப்பட்டதற்குமான உத்தியோகபூர்வ காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும், விமானம் பின்னர் 7500 என்ற அவசர குறியீட்டையும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7500 என்பது விமானத்தில் சட்டவிரோத தலையீடு அல்லது கடத்தல் போன்ற சம்பவங்களை குறிக்கும் சர்வதேச குறியீடாகும்.

Haaretz வெளியிட்ட தகவலின்படி, குறித்த விமானத்தில் சுமார் 180 இஸ்ரேலிய பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர சமிக்ஞை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலிய விமானப்படையின் போர் விமானங்கள் அவசரமாக அனுப்பப்பட்டதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

மேலும், விமானம் சுமார் இரண்டு நிமிடங்களில் 34,000 அடி உயரத்திலிருந்து 16,600 அடி உயரம் வரை, அதாவது சுமார் 17,400 அடி உயரத்தை இழந்து திடீரென கீழிறங்கியதாகவும் சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

 தொழில்நுட்பக் கோளாறு

சில தகவல்கள், சமிக்ஞை தவறுதலாக அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் செயல்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றன. 

விமானம் தரையிறங்கிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இது விமானக் கடத்தல் சம்பவம் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டதாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

180 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் ஒலித்த அவசர சமிக்ஞை! நடுவானில் ஏற்பட்ட பரபரப்பு | Dubai Tel Aviv Flight Reports Suspected Hijacking

துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் அருகிலுள்ள பென் குரியன் விமான நிலையம் வரை பயணிக்க திட்டமிடப்பட்டிருந்த FZ1073, இந்த இரு நகரங்களுக்கு இடையே வழக்கமாக இயக்கப்படும் Flydubai விமான சேவையாகும்.

சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் மற்றும் அதில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US