இராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்ற வடகொரிய அதிபர்
வடகொரியாவில் உயிரிழந்த இராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி கிம் ஜோங் உன் கலந்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த இராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி கிம் ஜோங் உன் கலந்துகொண்டதாகவும் அவரது உடலை சுமந்து சென்றதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் தந்தை கிம் ஜோங் இல்-க்குப் பிறகு முக்கியத் தலைவராக அறியப்பட்டவர் இராணுவ மார்ஷல் ஹியோன் கோல்- ஹே.
நேற்று (22) நடைபெற்ற இராணுவ அதிகாரியின் இறுதிச் சடங்கில் அதிபர் கிம் ஜோங் உன் கலந்துகொண்டார்.
மேலும் அவரது உடலையும் சுமந்து சென்றார். மேலும் வீரர்கள், அதிகாரிகள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அவரது பெயர் என்றும் நினைவு கூறப்படும் என கிம் ஜோங் உன் தெரிவித்ததாகவும் வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri