கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: தென்கொரியா மீது வட கொரியா ஏவுகணைத் தாக்குதல்
தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், நேற்று (05.1.2023) காலை 9 மணியளவில் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து அமைதியை குலைக்கும் ஆத்திரமூட்டும் செயல் என்று தென் கொரிய கூட்டுப் படைத் தலைவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
திடீர் ஏவுகணைத் தாக்குதல்
தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா 200 க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எதிர்பாராத இந்த தாக்குதலால் யோன்பியோங் தீவில் உள்ள மக்கள் உடனே வெளியேற தென் கொரிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனினும், இந்த தாக்குதலால் பொதுமக்களுக்கோ அல்லது தென் கொரிய இராணுவத்துக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
கூட்டு போர்ப்பயிற்சி

அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் நீடித்து வரும்நிலையில், அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்ட தென் கொரியா அண்மையில் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சி மேற்கொண்டது.
இந்த போர்ப்பயிற்சி நடைபெற்ற சில நாட்களில் வட கொரியா தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam