ரஷ்ய நில நடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்தா.. வெளியான முக்கிய அறிவிப்பு
ரஷ்யாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி ஆபத்து கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கம்சாட்கா கரையோரத்தில் ஏற்பட்ட 8.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால், இந்தியப் பெருங்கடலை சார்ந்த நாடுகளுக்கு சுனாமி அபாயம் எதுவும் இல்லை என இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் நிவாரண அமைப்பு (IOTWS) அறிவித்துள்ளதுடன், இலங்கை அனர்த்த முகாமைத்துவ மையமும் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
சுனாமி அபாயம் இல்லை..
இந்த நிலநடுக்கம் பெரியது எனினும், இந்தியப் பெருங்கடல் வரம்பிற்குள் உள்ள அல்லது அதனைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு எந்தவித சுனாமி அபாயமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, யுனெஸ்கோவின் IOC (Intergovernmental Oceanographic Commission) அமைப்புடன் இணைந்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லையென்பதுடன், இந்தியப் பெருங்கடல் வளாகத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவை அண்டிய பகுதியில் ஏற்பட்ட இந்த பாரிய நில நடுக்கம் காரணமாக ஜப்பான், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
