ஜனாதிபதி கதிரையிலிருந்து ரணிலை எவராலும் நீக்க முடியாது: மனுஷ திட்டவட்டம்
ஜனாதிபதி கதிரையிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை எவராலும் நீக்க முடியாது என்பதை நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியள்ளார்.
இலங்கையயை அபிவிருத்தியடைந்த நாடாக மற்றும் வரையில் அவர் தனது பயணத்தை நிறுத்த மாட்டார் எனவும் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அனுராதபுர இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
வியாபாரத்தில் முன்னேற்றம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன்னும் சில காலம் நாட்டின் தேசியத் தலைவராக அவரை ஜனாதிபதி பதவியில் அமர்த்த வேண்டும்.
தற்போது திருடர்களை கைது செய்வதற்கு முன் அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை அமைத்து பல வருடங்களாக அழிந்து போன நாட்டை சீர்செய்யும் பணியை ஆரம்பித்துள்ளார்.
2018ல் நாடு இருந்த நிலையிலிருந்து 2024இற்குள் எங்களால் மாற்றத்தை கொண்டு வர முடிந்துள்ளது.
ஆகவே 2048இல் முழு நடையும் வெற்றி பெற்ற நாடாக மாற்றப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். இன்றைய தொழிலதிபர்கள் ஏதோ ஒரு வழியில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், சாதாரண மக்களும் உழைப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இறுதி சந்தர்ப்பம்
அவர்கள் மின்சாரம், எரிபொருள் இல்லாதொரு யுகத்துக்கு மீண்டும் செல்ல தயாரில்லை. நாட்டை நேசிக்காதவர்கள் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க பார்க்கிறார்கள்.
அவரை தோற்கடிப்பது இந்த நாட்டை தோற்கடிப்பதற்கு சமனாகும். இது நாட்டைக் காப்பாற்றக் கூடிய நேரமல்ல. மக்களைக் காப்பாற்ற கிடைத்த இறுதி சந்தர்ப்பம்.
மேலும், ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக நீடித்தால்தான் மக்களைக் காப்பாற்ற முடியும் . அ்தோடு, இலங்கையை வெற்றி பெற செய்வதற்கு இதுவே கடைசி வாய்ப்பு.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |