கெஹலியவின் அமைச்சுப் பதவி தொடர்பில் வெளியான தகவல்
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சுப் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படலாம் என்று அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அதனையடுத்து அவர் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி
எனினும் தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பான விசாரணைகளின் பிரகாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
[NLRJ3L
இந்நிலையில் விளக்கமறியலில் உள்ள ஒருவரை அமைச்சரவையில் தொடர்ந்தும் வைத்திருப்பது குறித்து அரசாங்கத்துக்குள் எதிர்ப்பலையொன்று எழுந்துள்ளது.
அதன் காரணமாக கெஹெலியவின் அமைச்சுப் பதவி விரைவில் பறிக்கப்படலாம் என்று அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.