வன்முறையில் எரிக்கப்பட்ட பேருந்துகள் - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் பின்னர் அரசியல் கட்சிகளுக்கு தனியார் பஸ்களை வழங்குவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தீர்மானித்துள்ளது.
கடந்த 9ம் திகதி காலி முகத்திடலில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் பின்னர் நாற்பத்தைந்து தனியார் பேருந்துகள் வன்முறைக் கும்பல்களால் முற்றாக அழிக்கப்பட்டன.
சுமார் 45 பேருந்துகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பேருந்துகள் பழுது நீக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேருந்துகள் முழுமையாக காப்பீடு செய்யப்படவில்லை என்றும், அதனால் முழு செலவையும் மீளப் பெற முடியாது என்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியது.
வன்முறையின் போது பல பேருந்துகள் அழிக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் குழு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதற்காக பல தனியார் பேருந்துகளில் கொழும்பை வந்தடைந்தது.
அந்த கும்பல் பின்னர், அலரிமாளிகைக்கு அருகாமையிலும், காலி முகத்திடலிலும் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இதன்போது மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களை அழைத்து வந்ததாக கூறப்படும் பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri

திடீரென விஜய் டிவி செய்த மாற்றம், கோபத்தில் உள்ளாரா எஸ்.ஏ.சி- இப்படியொரு முடிவு எடுத்தாரா? Cineulagam

இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்... கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து News Lankasri

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam
