ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு - தற்போதைய நிலவரம்(video)
கொழும்பில் இன்று வன்முறை வெடித்திருந்த நிலையில், பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீடு உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டி 11ம் திகதி வரையில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி கொழும்பில் தற்போது பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அலரி மாளிகை பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர், மற்றும் விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அலரி மாளிகை பகுதியில் சேதப்படுத்தப்பட்ட பொருட்கள் அப்புறப்படுத்தப்படுகின்றது. மேலும், மாலைப் பொழுதில் பேருந்துகளுக்கு வைக்கப்பட்ட தீ தற்போது வரையிலும் இலேசாக எரிந்துகொண்டிருப்பதையும் காணமுடிகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சுவிட்சர்லாந்திலுள்ள இந்திய உணவகத்துக்கு வருபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஒரு சுவாரஸ்ய தகவல் News Lankasri

30 நாட்களில் சென்னையில் தரமான வசூல் வேட்டை நடத்தியுள்ள கமல்ஹாசனின் விக்ரம்- இதுவரை இவ்வளவு வசூலா? Cineulagam

விஜய் டிவியில் இருந்து வெளியேறிய ரச்சிதாவுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு! என்ன தெரியுமா Cineulagam

லண்டனில் 26 வயது இலங்கை பெண்ணிற்கு நடந்த ஆச்சரியம்! கனவுல கூட நினைச்சு பார்க்கல என மகிழ்ச்சி News Lankasri
