அவசரமாக இடமாற்றப்பட்ட இஷாரா செவ்வந்தி! தீவிரமடையும் விசாரணை
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு அவர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்
சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக, இஷாரா செவ்வந்தி கடந்த ஆண்டு பெப்ரவரி 19 ஆம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் சிறப்பு பொலிஸ் குழுக்களினால் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் நேபாள பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றப்பிரிவில் இவர் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.
இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணை 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட அவரை ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam