இலங்கையில் அதிகூடிய வெப்ப அலை! பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (14) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்த நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.
பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri