பாதாள உலகக் குழுக்களின் குடும்பங்களை இலக்கு வைத்து தொடரும் பழிவாங்கும் நடவடிக்கைகள்..!
பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்காக பொலிஸார் வெளிநாடுகளுக்குச் சென்று, சர்வதேச பொலிஸ் ஒத்துழைப்புடன் அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருகின்றனர்.
“நீந்துவதற்குத் தண்ணீரில் இறங்கத்தான் வேண்டும்” என உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாதாள உலகக் குழுக்களின் தலைவர்களுக்கிடையிலான மோதல்கள் தற்போது பழிவாங்கும் சம்பவங்களாக மாறி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு உதாரணமாக, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.
அண்மையில், கஞ்சிபானி இம்ரானின் மாமாவும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். எனவே, பொலிஸாரின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், பாதாள உலகக் கும்பல்களின் பழிவாங்கும் கலாசாரமும் ஆயுதப் பயன்பாடும் தொடர்ந்து வருகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகிறது லங்காசிறியின் “நாட்டு நடப்பு” நிகழ்ச்சி...
நம் முன்னேற்றத்தை தடுக்க விரும்புகிறார்கள்; அதற்கு தடைவிதிக்கப்போவதில்லை - ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri