யாழில் கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத இளைஞன் எடுத்த தவறான முடிவு
கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத இளைஞன் ஒருவர் இன்றையதினம்(22) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
இதன்போது யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் கிரிஸ்டியன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீண்ட நாட்கள் திட்டம்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கனடா செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும் நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம் - ஆரியகுளம் பகுதிக்கு அருகில் உள்ள காணியில், மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |