முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி
கட்டான பகுதியில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (22) இரவு 7:10 மணியளவில் கட்டான கட்டியான பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
நபர் ஒருவர் வர்த்தகர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ள நிலையில் வர்த்தகர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் உயிரை நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட நபர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |