மதபோதகராக மாறிய இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான மலிந்த வர்ணபுர போதகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நியூசிலாந்தின் போதகராக, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று போதகர் ஜெரோம் பெர்னாண்டோவால் மலிந்த வர்ணபுரவுக்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மலிந்த வர்ணபுர
மலிந்த வர்ணபுர வலது கை வேகச் சுழல் பந்து வீச்சாளராகவும் செயற்பட்டார்.
1998 - 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கினார்.
எனினும் அவர், 2007 ஆம் ஆண்டு வரை இலங்கை துடுப்பாட்ட அணிக்கு விளையாடவில்லை.
ஆனால் அதற்கு முன்னர் 1998 பொதுநலவாயப் போட்டிகளின் போது அங்கு சென்ற இலங்கை துடுப்பாட்ட அணியில் இடம்பிடித்திருதார்.
இலங்கை A அணிக்கு விளையாடி பங்களாதேஷ் A அணிக்கு எதிராக பெறப்பட்ட 242 ஓட்டங்கள், இவர் பெற்ற கூடிய ஓட்டங்களாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |