கோட்டாபயவின் திட்டத்தால் திருகோணமலையை இலக்கு வைத்த அநுர!
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவம், மற்றும் பிற குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட நில அபகரிப்பு தொடர்பில் இன்றும் முற்றுப்பெறாத கோரிக்கைகளும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பௌத்தமயமாக்களை நோக்காக கொண்டு செயற்படும் தென்னிலங்கை அரசியல் என்பது, தமிழர் சமூகத்துக்கு பெறும் சவாலாக மாறியுள்ளது.
உள்நாட்டுப் போருக்குப் (1983-2009) பின்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் நிலங்கள் இராணுவ முகாம்கள், குடியேற்றங்கள், அல்லது வெளிநாட்டு முதலீடுகளுக்காக கையகப்படுத்தப்பட்டன என அரசியல் தலைமைகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் கலாசார அடையாளத்தையும் பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் பகிரங்கமாக முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் முந்தைய அரசாங்கங்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலங்களையும், மத வழிபாட்டிடங்களையும் ஆக்கிரமித்தே வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கலை விரிவுபடுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.குகதாசன் குற்றம் சுமத்தினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் தற்போதைதைய அரசாங்கத்துக்கு சாதகமாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,