லண்டனில் இலங்கைத் தமிழருக்கு சொந்தமான கடைக்கு சீல் வைப்பு
பிரித்தானியாவின் லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு சொந்தமான கோழிக்கடையில் சட்டவிரோத தொழிலாளர்கள் பலமுறை கண்டுபிடிக்கப்பட்டதால் அதன் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பெருந்தொகை ஸ்ரேலிங் பவுண்ட் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு இடையில் நான்கு முறை குறித்த கடை உள்துறை அலுவலக குடிவரவு அமலாக்க அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குடியேற்ற சட்டம்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சட்டவிரோத தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையின் உரிமையாளரான தமிழர் குடியேற்றச் சட்டங்களை முழுமையாக புறக்கணித்ததாகவும், தனது வணிக நடைமுறைகளை மேம்படுத்த விருப்பவில்லை எனவும் உள்துறை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அகதி தஞ்சம்
சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத தொழிலாளர்கள் அனைவரும் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்களாகும்.
அவர்களில் யாரும் அகதி தஞ்சம் கோரவில்லை அல்லது பிரித்தானியாவில் வேலை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
