ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் 20ற்கும் மேற்பட்டோர் பலி
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது இன்று (22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதில் 20ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழப்பு
இந்த தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைத்தியரான பரமேஸ்வரம் மற்றும் 83 வயது சந்துரு ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு இராணுவமும் பொலிஸார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
''இது சுற்றுலாப் பயணிகள் மீதான கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல். இதற்கு காரணமாக இருந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்" என்று பிராந்தியத்தின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |