போப் பிரான்சிஸின் மரணத்தை தொடர்ந்து சீல் வைக்கப்படும் அவரது அறை..!
போப் பிரான்சிஸ் ஏழைகளுக்கான தனது பணிவு மற்றும் அர்ப்பணிப்புக்காக உலகளவில் அறியப்பட்ட ஒருவராவார்.
88 வயதில் நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ், நேற்று முன்தினம் 21 காலை உயிரிழந்துள்ளார்.
இவரின் மறைவினை தொடர்ந்து அடுத்த போப் யார் என்ற கேள்வியே மக்களிடையே எழுந்துள்ளது.
இந்தநிலையில், வத்திகானுடைய நடைமுறைபடி போப்பினுடைய இறப்பை உறுதி செய்யும் அவருடைய நிதி செயலாளர், 3 முறை அவருடைய ஞானஸ்தானம் பெறும் பெயரை அழைப்பாராம்.
அந்த 3 முறைக்கும் பதிலிள்ளாத போதே அவரின் இறப்பு உலகிற்கு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
1963ஆம் ஆண்டுவரை இறந்த போப்பினுடைய நெற்றியில் வெள்ளியிலான சுத்தியலில் 3 முறை தட்டி அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறை பிரகாரம் போப்பினுடைய அவருடைய மோதிரமும், உத்தியோகப்பூர்வமான இறப்பர் முத்திரையும் சுத்தியலினால் அடித்து உடைக்கப்படும் வழக்கமுள்ளதாக கூறப்படுகின்றது.
அவரின் இறப்பு உறுதிசெய்த பிறகு அவரின் உத்தியோகப்பூர்வ அறைக்கு சீல் வைக்கப்படும் என்ற நடைமுறையும் அங்குள்ளது.
இவ்வாறான சுவாரஸ்யமான விடயங்களை முழுமையாக தாங்கி வருகின்றது கீழ்வரும் காணொளி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam