போப் பிரான்ஸிஸ் எழுதிய காதல் கடிதம்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உயிரிழந்ததை தொடர்ந்து அவரைப்பற்றிய சுவாரஸ்ய தகவலொன்று வெளியாகியுள்ளது.
ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற இயற்பெயரையுடைய போப் பிரான்சிஸ் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் பிறந்துள்ளார்.
அங்கு உள்ள மெம்ப்ரில்லர் தெருவில் வசித்த போது ஜோர்ஜ் அமலியா டோமோன்டே என்ற தனது அண்டை வீட்டுப் பெண் மீது காதல் வயப்பட்டுள்ளார்.
காதல் கடிதம்
அவர், 12 வயதில், ஜோர்ஜ் அமலியாவுக்கு ஒரு காதல் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு, போப் ஆண்டவராக பொறுப்பேற்ற பின்னர் அமாலியா என்ற அந்த பெண்மணி அந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்து நேர்காணல் அளித்திருந்தார்.
அதில் சிவப்பு கூரையுடன் கூடிய ஒரு சிறிய வெள்ளை வீட்டின் ஓவியத்தை வரைந்திருந்துள்ளார். தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அத்தகைய வீட்டை தான் வாங்குவேன் என்று அதில் எழுதியுள்ளார்.
மேலும், "நான் உன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், நான் ஒரு பாதிரியாராகிவிடுவேன்" என்றும் அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
மரியாதையான உறவு
அந்தக் கடிதம் குழந்தைத்தனமானது என்று அமலியா நினைத்து அவர் அதற்கு பதிலளிக்காமல் இருந்துள்ளார்.
அத்துடன் அமலியாவின் கண்டிப்பான பெற்றோரும் இந்தக் கடிதத்தைக் கண்டுபிடித்துள்ளதுடன் அவர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்து வைத்துள்ளனர்.
அவரது தந்தை,'எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு ஆணுக்கு நீ கடிதம் எழுதுவாய்' என்று கூறி அடித்துள்ளார். சிறிது காலத்திலேயே ஜோர்ஜ் பெர்கோக்லியோ குடும்பம் அங்கிருந்து வேறு இடத்துக்கு குடிபெயர்ந்துள்ளது. அமலியா இறுதியில் வேறொருவரை மணந்துள்ளார்.
அதன்பின் அமாலியா - ஜோர்ஜ் இருவரும் பல மாதங்களுக்கு சந்திக்கவே இல்லையாம்.
இறுதியில் ஜோர்ஜ் பாதிரியாகும் நிகழ்வில்தான் அமாலியா அவரை பார்த்தாராம். இவரின் பாதையும் வெகு தொலைவில் சென்றவிட்ட பின்னரும், ஜோர்ஜ் - அமாலியா இடையே ஒரு நட்பான, மரியாதையான உறவு நீடித்துள்ளது.
இருவருக்கும் பல ஆண்டுகளாக கடித போக்குவரத்தும் இருந்திருக்கிறது. நல்ல வேளை அன்று நான் அவருக்கு சரியென்று கூறவில்லை என்றும் அமாலியா ஒருமுறை நகைச்சுவையாக கூறியதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.
You May Like This..