போப் பிரான்சிஸின் மரணத்திற்கு முன்னர் அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
மறைந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் உடலை வத்திகானுக்கு வெளியே அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறப்பதற்கு முன்னர் அவர் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, ரோமின் செயிண்ட் மேரி மேஜர் பேராலயத்தில் அவரது உடல் அலங்காரமின்றி அடக்கம் செய்யப்பட உள்ளது.
சுவாசக் கோளாறு
அத்துடன், அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் லத்தீன் மொழியில் பிரான்சிஸ்கஸ் என்ற அவரது போப்பாண்டவர் பெயரின் கல்வெட்டு இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் காலமானார்.
சுவாசக் கோளாறு காரணமாக பெப்ரவரி 14ஆம் திகதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
38 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23 அன்று வத்திக்கானுக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
