சிறி தலதா வழிபாட்டு நாளையதினம் வர வேண்டாம்..! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
நாளை தவிர மேலும் நான்கு நாட்களுக்கு " சிறி தலதா வழிபாடு" நிகழ்வில் பங்கேற்க முடியும் என்பதால், நாளைய தினத்தை தவிர்த்து அடுத்தடுத்த நாட்களில் பங்கேற்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளைய தின (23) "சிறி தலதா வழிபாடு" நிகழ்வில் பங்கேற்பதற்காக, கண்டி நகரில் இன்று (22) மாலை 6:00 மணியளவில் 80,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு
இலங்கை பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பில்,

நாளை காலைக்குள் இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாளை பகல் நேரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சிறி தலதா வழிபாடு
நாளை தவிர மேலும் நான்கு நாட்களுக்கு சிறி தலதா வழிபாடு நிகழ்வில் பங்கேற்க முடியும் என்பதால், நாளைய தினத்தை தவிர்த்து அடுத்தடுத்த நாட்களில் பங்கேற்பதன் மூலம் பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி வழிபாட்டை மேற்கொள்ள முடியும் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

"சிறி தலதா வழிபாடு" கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று (22) வரையிலான காலப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் தலதா வழிபாட்டில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri