சபாநாயகருக்கு எதிராக 46 குற்றச்சாட்டுகள்: நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரத் தீர்மானம்
சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாகவே இந்த பிரேரணை கொண்டு வரப்படுவதாக கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
46 குற்றச்சாட்டுக்கள்
இதற்கமைய, உரிய பிரேரணை விரைவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏற்கனவே ஒரு நிபுணர் குழுவினால் வரைவு செய்யப்பட்டுள்ளதுடன், அதில் சபாநாயகருக்கு எதிரான 46 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில், இந்தப் பிரேரணையை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri