போர் குற்றங்கள் தொடர்பில் முக்கிய கருத்துக்களை வெளியிட்டிருக்கும் கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ..
ஈழப் போரின் இறுதி தறுவாயில் போர் குற்றங்கள் நடைபெற்றதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் ஆனால் இவை அச்சந்தர்ப்பங்களில் அழிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் நல்லாட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கு முன்னிலையில் செயற்பட்டவர்.
மேலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஜே. ஆர். ஜெயவர்தன அரசாங்கக் காலத்தில் இருந்து குரல் கொடுத்தவர்.
யுத்தப் பிரகடனம்
ஒரு யுத்தம் (War) நிலவுவதாக பிரகடனம் செய்யப்பட்டது. எனவே, பயங்கரவாதத்தை அடக்கும் விவகாரத்தில் குற்றம் நடந்திருந்தால், அந்த குற்றம் குறித்து நாம் விசாரணை நடத்த வேண்டும். 'அவர் பயங்கரவாதி என்பதால் தான் கொன்றேன்' என்று கூற முடியாது.
அவர் ஒரு பயங்கரவாத அமைப்பில் இருந்திருக்கலாம். நேரடி மோதலின் போது (Direct conflict) ஒருவரையொருவர் கொல்வதற்கும், அதற்குப் பின்னரான நிகழ்வுகளுக்கும் வித்தியாசம் உள்ளது.
போர்க் குற்றம் என்பதற்கு சில வரைவிலக்கணங்கள் உள்ளன. ஒரு போரை நடத்துவதற்குக் கூட ஒரு சட்டக் கட்டமைப்பு இருக்க வேண்டும், அதில் பரஸ்பர தன்மை இருக்கலாம் என்று எல்.ஆர். (LR) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுதமற்ற பொதுமக்கள் மீது குண்டுவீசி அவர்களைக் கொல்வது போன்ற சம்பவங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால், அவை குற்றங்களாகும்.
அது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் வழக்கு தொடரும் உரிமை உள்ளது. இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட 500 பேர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை. அவையும் போர் குற்றங்களே.நிராயுத பாணிகளாகவே அவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போருக்கு பின்னரான குற்றங்கள்
அதேபோல், நமது தரப்பால் ஆயுதமற்ற நபர்களைக் காணாமல் போகச் செய்தல், ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தல் மற்றும் உயிரிழந்த போர்க் கைதிகளின் உடல்களைப் புதைத்த பின்னர் அவர்களின் கல்லறைகளை உடைத்துச் சேதப்படுத்துதல் போன்றவை போர்க் குற்றங்களாகும்.
போர்க் குற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நடப்பது மட்டுமல்ல, போருடன் தொடர்புடைய அனைத்து வன்முறைகளும் அதில் அடங்குகின்றன.
மனிதநேய நடவடிக்கையாக இருந்தாலும், அந்த மனிதநேய நடவடிக்கையின் போது குற்றங்கள் நடந்திருக்கலாம். அது இரு தரப்பிலிருந்தும் நடந்திருக்கலாம்.
ஒரு மோதலின் போது யாருக்கும் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. உலகில் உள்ள அனைத்து மோதல்களையும் பார்த்தால், ஒரு அரசால் பயங்கரவாதத்தை அடக்குவது தொடர்பான சட்டங்கள் இருக்கும்.
அதே வேளையில், மனித உரிமைகள் சார்ந்த ஒரு கட்டமைப்பும் (Framework) உள்ளது. பயங்கரவாதிக்கும் மனித உரிமை உண்டு. தற்காப்பு உரிமை என்பது எனக்கு மட்டுமல்ல,
எனக்கு அருகில் இருப்பவர் ஒருவரின் உயிரைப் பறிக்க ஒருவர் வருகிறான் என்றால், அந்த நபரைத் தற்காப்புக்காகக் கொலை செய்வதற்குக்கூட சட்டப் பாதுகாப்பு குறிப்பிட்ட அளவுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
நீட் தேர்வு பிரச்சனைக்காக போராடும் மாணவர்களுக்கான நடிகர் சூர்யா எடுத்த முடிவு... என்ன தெரியுமா? Cineulagam