புதிய நாடாளுமன்ற சபாநாயகர் குறித்து வெளியான தகவல்
புதிய அமைச்சரவையின் நாடாளுமன்ற சபாநாயகராக நிஹால் கலப்பத்தி (Nihal Galappaththi) நிஹால் கலப்பத்தி ஆளும் கட்சியினால் பரிந்துரை செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த பதவிக்காக பிமல் ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்ட போதிலும் பின்னர் அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அவர் 125,983 விருப்பு வாக்குகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri