அநுர மீது மலையக மக்களின் நம்பிக்கை! புதிய அமைச்சர் வழங்கியுள்ள உறுதி மொழி
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) மீது பெருந்தோட்ட மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள். நிச்சயமாக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிறந்த திட்டங்களை நாங்கள் செயற்படுத்துவோம் என்று பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன(Chamanda Vidhyaratna) தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் அர்ப்பணிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீது பெருந்தோட்ட மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கும் பெருந்தோட்ட மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.
பெருந்தோட்ட பகுதிகளில் தமிழர்களைப் போன்று சிங்களம், முஸ்லிம் சமூகத்தினரும் வாழ்கிறார்கள். இருப்பினும் தமிழர்களுக்கு அடிப்படை பிரச்சினைகள் பல காணப்படுகின்றன.
தொண்டமான் மற்றும் திகாம்பரம் ஆகியோரின் இராசதானியாகவே பெருந்தோட்ட பகுதி இதுவரையில் காணப்பட்டது. இருப்பினும் அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. பெருந்தோட்ட பகுதிகளை நிச்சயம் புனரமைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரணில் தரப்பு தேசியப் பட்டியல் விவகாரம்! இறுதி தீர்மானத்திற்கு தயாராகும் கட்சி