கனடாவை உலுக்கவுள்ள பாரிய நிலநடுக்கம்! எச்சரித்துள்ள விஞ்ஞானிகள்
கனடாவில் பூமிக்கு அடியில் ஒரு குறிப்பிட்ட பகுதி மில்லியன் கணக்கான ஆண்டுகளாக அமைதியாக அழுத்தத்தைக் குவித்து வருகிறது.
அது திடீரென மோசமான ஒரு நிலநடுக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம்
சமீபத்தில், யூகோன் பகுதியில் 'Tintina Fault' என்ற ஒரு கோட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றது. சுமார் 1,000 கிலோமீற்றர் கொண்ட Tintina Fault என்பது யூகோனில் இருந்து தொடங்கி அலாஸ்கா வரை செல்லும் ஒரு நீண்ட கோடாகும்.
இது பிரிட்டிஷ் கொலம்பியா வழியாகச் சென்று தெற்கு கனடாவில் ஒரு பள்ளத்தாக்கை உருவாக்கும் மற்றொரு பெரிய கோட்டில் இணைந்துள்ளது.
மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கோடு நிறைய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
ஆனால் கடந்த 12,000 ஆண்டுகளாக இது அமைதியாக உள்ளது இந்தப் பிளவு படிப்படியாக அழுத்தத்தைக் குவித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
கடந்த 26 லட்சம் ஆண்டுகளில், அதன் இரு பக்கங்களும் 1,000 மீற்றர் சரிந்துள்ளன, கடந்த 1.36 லட்சம் ஆண்டுகளில், 75 மீற்றர் சரிந்துள்ளன. இது ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாக நகர்ந்து வருவதால் அழுத்தம் குவிந்துள்ளது.
தற்போது, 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் அளவுக்கு அதிக அழுத்தம் அடைந்துள்ளது.
தற்போது 6 மீற்றர் அளவிற்கு அழுத்தம் குவிந்துள்ளது என்றும், இது ஒரு நிலநடுக்கத்திற்கு போதுமானது என்றும் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும் நிலநடுக்கம் எப்போது நிகழும் என்று யாராலும் கணிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் திருவிழா




