கொழும்பில் மீட்கப்பட்ட கோடிக்கணக்கான பொருள்! பின்னணியில் சிக்கிய வெளிநாட்டவர்
கிரிபத்கொடை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை உட்பட இருவர் களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 6 கோடி ரூபா என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாய்லாந்து பிரஜை இந்த போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களனி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.