வெளிநாடொன்றில் பாதையில் ஓடிய மனித உருவ ரோபோ! இணையத்தில் பரவும் காணொளி
துபாயில் மனித உருவ ரோபோ ஒன்று சாலையைக் கடப்பது போன்ற காணொளியொன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
எமிரேட்ஸ் டவர் அருகே உள்ள சாலையில் வேகமாகச் செல்லும் ஒரு காருக்கு முன்னால் இந்த ரோபோ மிதமான வேகத்தில் ஓடி சாலையைக் கடக்கிறது.
மனித உருவ ரோபோ
இதனை காரில் பயணித்த பயணியொருவர் காணொளியெடுத்துள்ளார்.
சாலையைக் கடந்ததும், ரோபோ உடனடியாக நின்று திரும்பி, நடைபாதையில் நடக்கத் தொடங்குகிறது காணொளியில் பதிவாகியுள்ளது.
ரோபோவின் பின்னால் அதன் உரிமையாளர் ஒரு ரிமோட் கண்ட்ரோலைக் கொண்டு அதை இயக்குவது தெரிகிறது.
ரிமோட் மூலம் இயக்கப்படுவதால், அந்த ரோபோ மனிதனைவிட வேகமாக தனது வேலைகளை செய்கின்றது.
இந்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




