டொனால்ட் ட்ரம்பை நோபல் சமாதான பரிசுக்கு பரிந்துரைத்துள்ள மூன்றாவது நாடு
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துடனான எல்லை மோதலை நிறுத்துவதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடித் தலையீட்டின் அடிப்படையில், கம்போடியா நோபல் அமைதிப் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைக்கும் என்று அந்த நாட்டின்; துணைப் பிரதமர் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கும் கம்போடியாவின் திட்டத்தை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நோபல் சமாதான பரிசு
முன்னதாக தலைநகர் புனோம் பென்னில் செய்தியாளர்களிடம் பேசிய சாந்தோல், அமைதியைக் கொண்டு வந்ததற்காக ட்ரம்புக்கு நன்றி தெரிவித்தார்.
அத்துடன், நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவதற்காக, வழங்கப்படும் மிக உயர்ந்த சர்வதேச விருதான இந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவதற்கு ட்ரம்ப் தகுதியானவர் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, இந்தியாவுடனான மோதலைத் தீர்க்க உதவியதற்காக ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் ஜூன் மாதம் கூறியது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த மாதம் ட்ரம்பை இந்த விருதுக்கு பரிந்துரைத்ததாகக் கூறியிருந்தார்.
இதேவேளை ட்ரம்ப் கம்போடியாவுக்கான இறக்குமதி வரியையும் 19 வீதத்துக்கு குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




