அன்றே கணித்த புதிய பாபா வாங்கா! பேசுபொருளாகியுள்ள கணிப்பு
ரஷ்யாவில் உள்ள கம்சத்கா தீபகற்பத்தில் நேற்று முன்தினம் (30) 8.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில், ஜப்பானில் 2025ஆம் ஆண்டில் சுனாமி ஏற்படும் என்பது குறித்த பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்புகள் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
புதிய பாபா வங்கா
ஆனால், இது பாபா வங்கா கணிப்பல்ல, மாறாக ஜப்பானிய மங்கா கலைஞர் ரியோ தட்சுகி (Ryo Tatsuki) என்பவருடைய கணிப்பு எனத் தெரியவந்துள்ளது.
இவரை 'புதிய பாபா வங்கா' என்றும் குறிப்பிடுகின்றனர்.
ரஷ்யாவில் உள்ள கம்சத்கா தீபகற்பத்தில் ஜூலை 30 அன்று 8.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிபயங்கர நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹவாய், சிலி, ஜப்பான், சாலமன் தீவு பகுதிகளில் சுமார் 1 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரத்திற்கு அலைகள் எழும்பியுள்ளது. கடலோரப் பகுதிகளில் பேரழிவு ஏற்படலாம் என அஞ்சப்பட்டது.
கனவுகளில் கண்ட சில சம்பவங்கள்
ரியோ தட்சுகி, கடந்த 1999ஆம் ஆண்டிலேயே தனது கனவுகளில் கண்ட சில சம்பவங்களை வைத்து, 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜப்பானில் ஒரு பெரிய சுனாமி ஏற்படும் என்று கணித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சுனாமி 2011இல் ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு பெரியதாக இருக்கும் என்றும், ஜப்பானின் தெற்குப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்றும் அவர் கணித்திருந்தார். மேலும், அவர் வரைந்த சுனாமி பற்றிய ஓவியங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகின்றன.
இந்நிலையில், (ஜூலை 30) ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானின் ஹோக்கைடோ தீவுப் பகுதியிலும், ரஷ்யாவின் குரில் தீவுகளிலும் சுனாமி அலைகள் உருவாகியது.
அவசரகால எச்சரிக்கை
இதனால், ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் அவசரகால எச்சரிக்கைகளை விடுத்தது.
இது ரியோ தட்சுகியின் கணிப்பு உண்மையாகிவிட்டது என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பினும், ரியோ தட்சுகி ஜூலை 05, 2025 அன்று ஜப்பானை ஒரு பெரிய சுனாமி நேரடியாக தாக்கும் என்று கணித்திருந்தார்.
ஆனால், ஜப்பான் அரசு இதுவரை ரியோ தட்சுகியின் கணிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





சீனாவுக்கு புதிய நெருக்கடி... முதல் தாக்குதலுக்கு தயாராக ஜப்பான்: இந்த இடத்திலிருந்து குறி News Lankasri

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
