இலங்கையில் அரசியல் தீர்வு மிக அவசியம்: சம்பந்தனிடம் நியூசிலாந்து தூதுவர் வலியுறுத்து (Photos)

Sri Lankan Tamils R. Sampanthan Tamil National Alliance Sri Lankan political crisis
By Rakesh Dec 27, 2023 12:18 PM GMT
Report

இலங்கையில் அமைதி ஏற்பட மக்கள் சுதந்திரமாக வாழ அரசியல் தீர்வு கட்டாயம் காணப்பட வேண்டும் என இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பிள்டன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை அவரது கொழும்பு இல்லத்தில் இன்று (27.12.2023) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே நியூசிலாந்து தூதுவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை முழுவதும் மின்தடை: நாடு இருளில் மூழ்கியமைக்கான காரணம் அம்பலம் - மன்னிப்பு கோரிய சபை

இலங்கை முழுவதும் மின்தடை: நாடு இருளில் மூழ்கியமைக்கான காரணம் அம்பலம் - மன்னிப்பு கோரிய சபை

அரசியல் தீர்வு

இதன்போது கருத்து தெரிவித்த சம்பந்தன்,

“இலங்கைக்கான தூதுவர் பதவியிலிருந்து விரைவில் விடைபெறவுள்ள நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பிள்டன் இன்று காலை என்னைச் சந்தித்தார்.

இது நல்ல சந்திப்பு. இதன்போது பல முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசினோம்.

இலங்கையில் அரசியல் தீர்வு மிக அவசியம்: சம்பந்தனிடம் நியூசிலாந்து தூதுவர் வலியுறுத்து (Photos) | New Zealand Ambassador Met Sambandhan

அதிலும் முக்கியமாக அரசியல் தீர்வு சம்பந்தமாகப் பேசினோம். இலங்கையில் அமைதியையும், நீதியையும் ஏற்படுத்தும் வகையில் நியாயமான - நிலையான அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும், அப்போதுதான் நாடு முன்னேற்றமடையும் என்றும் அவரிடம் நான் கூறினேன்.

அதேவேளை, சர்வதேச ஒப்பந்தங்கள், சர்வதேச வாக்குறுதிகள் மற்றும் ஐ.நா. தீர்மானங்களை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் அவரிடம் நான் தெரிவித்தேன்.

தமிழ்பேசும் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீளிணைக்கப்பட வேண்டும் என்பதையும் அவரிடம் எடுத்துரைத்தேன்.

இந்தியாவின் அசாமில் நிலநடுக்கம்: தொடர் அதிர்வுகளால் அச்சம்

இந்தியாவின் அசாமில் நிலநடுக்கம்: தொடர் அதிர்வுகளால் அச்சம்

வெளிநாடுகள் அழுத்தம்

இவை தொடர்பில் இலங்கை அரசுக்கு நியூசிலாந்து உள்ளிட்ட அனைத்து வெளிநாடுகளும் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தினேன்.

இலங்கையில் அரசியல் தீர்வு மிக அவசியம்: சம்பந்தனிடம் நியூசிலாந்து தூதுவர் வலியுறுத்து (Photos) | New Zealand Ambassador Met Sambandhan

வடக்கு - கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால மற்றும் குறுகிய காலப் பிரச்சினைகள் தொடர்பிலும் அவரிடம் தெளிவுபடுத்தினேன். எனது கருத்துக்களை நியூசிலாந்து தூதுவர் ஏற்றுக்கொண்டார்.

தமது நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது என்றும், அங்கு மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் என்றும் கூறிய நியூசிலாந்து தூதுவர், அதே நிலைமை இலங்கையிலும் ஏற்பட வேண்டும் என்று தமது நாட்டு அரசு விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் அமைதி ஏற்பட அரசியல் தீர்வு கட்டாயம் காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வடக்கு, கிழக்குக்குத் தான் நேரில் விஜயம் செய்து பல தரப்பினரையும் சந்தித்துப் பேசியதாகவும் அவர் என்னிடம் கூறினார்.

இலங்கைக்கும், இங்கு வாழும் அனைத்து இன மக்களுக்கும் நியூசிலாந்து தொடர்ந்தும் உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்” என்றார்.

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை இடைநிறுத்தம்

காசாவில் தீவிரமடையும் போர்: அமெரிக்கா மற்றும் ஈரான் இணைந்த படைகள் தாக்குதல் - செய்திகளின் தொகுப்பு

காசாவில் தீவிரமடையும் போர்: அமெரிக்கா மற்றும் ஈரான் இணைந்த படைகள் தாக்குதல் - செய்திகளின் தொகுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US