ETF பணம் செலுத்துதலில் ஏற்பட்டுள்ள மாற்றம் - கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தரவு
ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF)கட்டண செலுத்துதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், 15 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்ட அனைத்து நிறுவனங்களும் இனிமேல் தங்களின் ETF பங்களிப்பு செலுத்துதல்களையும் மாதாந்திர அறிக்கைகளையும் முற்றிலும் டிஜிட்டல் வடிவத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று இதன்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30ஆம் திகதி வரை காலக்கெடு
அதன்படி, ஆகஸ்ட் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டிய ETF பங்களிப்பு செலுத்துதல்கள் தொடர்பாக இந்த உத்தரவு கடுமையாக நடைமுறைபடுத்தப்படும் என்றும் நிதியம் அறிவித்துள்ளது.

இதற்காக, நியமிக்கப்பட்ட ஒன்பது வணிக வங்கிகள் மூலம் டிஜிட்டல் வங்கி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வங்கிகளில் கணக்கு இல்லாத முதலாளிகள், மற்றொரு வங்கி மூலம் நேரடிப்பற்று (direct debit) முறையைப் பயன்படுத்தி ETF பங்களிப்பு செலுத்துதல்களை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை ஊழியர் சேமலாப நிதியத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அருகிலுள்ள கிளை அலுவலகங்களில் இருந்து பெறலாம் என்றும் அல்லது நிதியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் அணுகலாம் என்றும் www.etfb.lk.அறிவிக்கப்பட்டுள்ளது.